தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டம் நிறுத்தம்! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ற இருப்பதாக கடந்த மூன்று வார காலமாகவே செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது. இதனைத்தொடர்ந்து வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் கூட 110 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்று இருப்பதை ஒப்புக் கொண்டார். முறைகேடுகளில் ஈடுபட்ட பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் இருந்து திரும்ப பெறப்படுகிறது. அந்தவகையில் இதுவரையில் 32 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது. மீதம் இருக்கக்கூடிய தொகையை இன்னும் ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதத்தில் திரும்ப பெறப்படும் என்று வேளாண் துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வேளாண் துறை இயக்குனர் தட்சிணமூர்த்தி கடிதம் எழுதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இந்த முறைகேடுகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று இருக்கிறது .இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் 80க்கும் மேற்பட்டவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும் பல்வேறு உயர் அதிகாரிகள் பணி மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் எனவே இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக வேளாண் துறையினர் தட்சிணாமூர்த்தி அனைத்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm kissan scheme stop in tamil nadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->