ஆகஸ்ட் 15 முதல் தமிழகத்தில் முக்கிய தடை அமலுக்கு வருகிறது!!  - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தின் இயற்கை அழகை பாதுகாக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்த உத்தரவில், உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் படி, பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், குளிர் பானங்கள், பிளாஸ்டிக் பையில் பொதியப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் தடை விதிக்கப்படுவதாகத் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது,.

மேலும் நீலகிரி மாவட்ட நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகள் என எதிலும்  பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், குளிர் பானங்கள், பிளாஸ்டிக் பையில் பொதியப்பட்ட உணவுப் பொருட்களை விற்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் கொண்டு வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி மற்றும் பைபாஸ் சாலையில் சோதனைச் சாவடிகளில் சோதனை நடத்தவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

plastic bottle ban in nilgiri


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->