சற்று முன் தமிழக அரசு பிறப்பித்த அதிரடி தடை உத்தரவு!!  வெளியானது அரசாணை!! - Seithipunal
Seithipunal


சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது. மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு விலக்கு அறிவிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பின்னும், இந்த பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தமிழக அரசு கூறியிருந்தது.

மேலும் பிளாஸ்டிக் தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், விற்பனை செய்தல், கொண்டு செல்லுதல், பகிர்ந்து அளிக்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு முதல் முறை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 2வது முறை தவறு செய்தால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை பிடிபட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதன்பின்னரும் தவறு செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இதேபோல் பிளாஸ்டிக் தடையை மீறும் மளிகை கடைகள் மற்றும் மருந்துக் கடைகளுக்கு 1000 முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். சிறு வணிகர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே னேஅறிவேற்றப்பட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்தநிலையில்,  தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கும் நடைமுறை தற்போது அமலுக்கு வந்தது. மேலும் 3 முறை அபராதம் விதித்தும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் வணிக உரிமத்தை ரத்து செய்யவும் தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது வரை 820.50 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ1.58 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக  தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

plastic ban in tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->