பக்கா பிளான் போட்டு விபத்தை ஏற்படுத்தி, நகையை கொள்ளையடித்த மர்மநபர்கள்!! கொத்தாக படம்பிடித்த சி.சி.டி.வி கேமரா!! - Seithipunal
Seithipunal


 

கோவை மாவட்டம் கடைவீதி பகுதியில் சுரேஷ் என்பவர் நகைப்பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கடையில் ராமமூர்த்தி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவரிடம் கடை முதலாளி சுரேஷ் 106 சவரன் தங்க நகைகளை கொடுத்து தாராபுரத்தில் உள்ள நகைக்கடையில் கொடுக்குமாறு கூறியுள்ளார்.

இந்தநிலையில் நகைகளை பெற்றுக்கொண்டு ராமமூர்த்தி காந்திபுரம் பேருந்து நிலையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ஒருவர் வேண்டும் என்றே அவரது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

திடீரென ஒருவர் வாகனத்தின் மீது மோதியதால் ராமமூர்த்தி நிலைதடுமாறிகீழே விழுந்துள்ளார். அப்போது இவருக்கு பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த இருவர் விபத்து நடந்ததை கண்டு ராமமூர்த்திக்கு உதவுவது போல் நடித்துள்ளனர். அவர்களுடன் விபத்தை ஏற்படுத்திய நபரும் அவருக்கு உதவி செய்ய முயற்சித்துள்ளார். பின்னர் ராமமூர்த்தியை பொதுமக்கள் அருகில் உள்ள கடையில் அமரவைத்து தண்ணீர் கொடுத்து மயக்கத்தை போக்கினர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தில் வந்து, ராமமூர்த்திக்கு உதவுவதுபோல் னத்தவர்களில் ஒருவன், அவரிடம் இருந்த நகைப்பையை எடுத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் காத்திருந்த நபருடன் தப்பிச்சென்றுள்ளான். அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தும் அருகில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. 

இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் திட்டமிட்டு இந்த விபத்தை ஏற்படுத்தி நகையை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட ராஜா என்பவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

planned accident and theft jewelry


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal