மலைபகுதிகளில் உள்ள காலி மது பாட்டில்களை ரூ.10க்கு திரும்பப் பெறும் திட்டம்.. கொடைக்கானலில் அமல்..! - Seithipunal
Seithipunal


அரசு மதுபான கடைகளில் காலி மதுபான பாட்டில்களை கொடுத்து 10 ரூபாய் வாங்கி கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மலைபிரேதசங்களில் மதுபாட்டில்களை வீசுவதால் வனவிலங்குகள் பல்லுயிர் தன்மை சூழலுக்கு கெடுவிளைப்பதாக உள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குவிசாரணையின் போது இதற்கு என்ன மாதிரியான திட்டம் வைத்திருக்கிறீர்கள் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், மலைபகுதிகளில் இன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மற்றும் ஆத்தூர் தாலுகாவில் உள்ள சில மலை பகுதிகளில் உள்ள காலி மதுபாட்டில்களை சேகரித்து அங்குள்ள மதுபான கடைகளில் கொடுத்து ஒப்படைத்தால், பத்து ரூபாய் பெற்றுக்கொள்ளலாம் என, ஆட்சியர் விசாகன் ஆணையிட்டுள்ளார்.

முதற்கட்டமாக இந்த அறிவிப்பு கொடைக்கானல் மலைபகுதியில் உள்ள பத்து கடைகளில் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Plan to return empty liquor bottles in the hills for Rs 10


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->