பைக் டாக்ஸி சேவை..! மாஸ் காட்டும் மாற்றுத்திறனாளிகள்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் மா உலா என்ற பைக் டாக்ஸி சேவையில் ஈடுபட்டுள்ளனர். அதில் அவர்கள் பணம் சம்பாதிப்பதுடன், பொதுமக்களுக்கும் சேவை செய்து அசத்தி வருகிறார்கள். 

மாற்றுத்திறனாளிகள் என்றாலே மற்றவர்கள் உதவியுடன் வாழ்பவர்கள் என்ற நிலையை மாற்றி, தங்களாலும் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்கள்.

தமிழகத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் திருச்சியில், வாகனபோக்குவரத்தும், நெரிசலும் அதிகரித்துள்ள நிலையில், குறிப்பிட்ட நேரத்துக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதை கருத்தில் கொண்ட திருச்சியைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், ஒன்று சேர்ந்து, மா உலா என்ற பைக் டாக்சி சேவயை தொடங்கி இருக்கிறார்கள்.

தாங்கள் பயன்படுத்தும் மூன்று சக்கர வாகனத்தையே பைக் டாக்சியாக மாற்றியுள்ளனர். சத்திரம் பேருந்து நிலையம், கோட்டை ரயில் நிலையம், காந்தி மார்க்கெட், புத்தூர், ரயில்வே ஜங்ஷன், பால் பண்ணை ஆகிய பகுதிகளில் பைக் டாக்ஸி பொதுமக்களுக்காக காத்து நிற்கிறது.

அவர்கள் செல்ல வேண்டிய இடம் குறித்து இந்த, மா உலா பைக் டாக்ஸியை அணுகினால், பின்னால் அமரவைத்து ஓட்டிச்சென்று குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு சேர்த்து விடுகிறார்கள். எவ்வளவு குறைந்த தூரம் என்றாலும், அதற்கான கட்டணத்தை பேசி பயணிகளை அழைத்து செல்கின்றனர். குறைந்த கட்டணத்தில் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடிவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

இந்த பைக் டாக்ஸியை 9940409926 என்ற அலைபேசி எண்ணிலும் அல்லது மா உலா என்ற ஆப்பை டவுன்லோடு செய்தும் அழைக்கலாம். தங்களது முயற்சிக்கு காவல்துறையினரும், போக்குவரத்து அலுவலர்களும் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

physically challenged persons service


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->