இந்த மாவட்டத்தில் பெட்ரோல் போடுறவங்க உஷார்.! உங்க வண்டிக்கு ஆப்பு தான்.!  - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் இருக்கும் பெட்ரோல் பங்க் ஒன்றில் கலப்பட பெட்ரோல் போட்டதால், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரே நாளில் பழுதாகி நின்றுள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் இருக்கும், லீலா விநோதன் ஏஜென்ஸிக்கு சொந்தமான இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் பேராணம்பட்டு பகுதியில் செயல்பட்டு வருகின்றது. இந்த பங்கில் பெட்ரோலில் கலப்படம் செய்யப்படுவதாக பல நாட்களாகவேக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. 

இந்த நிலையில் நேற்று இந்த பங்கில் பெட்ரோல் போட்டு கொண்டு கிளம்பிய 100 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பழுதடைந்து இருக்கின்றது. இதன் காரணமாக அவர்கள் அனைவரும் பங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். 

Related image

அப்போது, ’பெட்ரோல் டேங்கில் டீசல் தெரியாமல் ஏறி வந்ததால் இப்படி நடந்துள்ளது. எனவே, அதற்கு பொறுப்பேற்று பழுதடைந்த வாகனங்களைத் நாங்களே சரிசெய்து தருகின்றோம்’ என பங்க் ஊழியர்கள் கூறினர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் ஒரு சிலர் மட்டும், "அவர்கள் சொல்வது பொய் மண்ணெண்ணெய் பெட்ரோலில் கலக்கப்பட்டதால் வாகனங்கள் பழுதானது." என்று கூறி கொண்டு இருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petrol pung issue in vellore district


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->