இன்று காலை வெளியான அதிர்ச்சி தகவல்., தமிழக அரசு எடுக்க போகும் முடிவு! பரபரப்பு செய்தி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு இன்றும் நாளையும் நடைபெறும் நிலையில், நியமனமத்தில் முறைகேடு என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருக்க கூடிய உயர் கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான நபர்களின் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. 

மேலும் அதனை தொடர்ந்து கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தின் வாயிலாக உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்திற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்து இருந்தது.

அதன்படி, இன்றும் நாளையும் பணி நியமன கலந்தாய்வு நடைபெற இருந்த நிலையில், இதில் முறைகேடு நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

வெளியான தகவலின் படி,

* 2018 ல் வெளியிடப்பட்ட இறுதிப்பட்டியலிலிருந்து 45 பேர் நீக்கப்பட்டு 85 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும்.

* வேலைவாய்ப்பு முன்னுரிமை மதிப்பெண்களில் 18 பேருக்கு திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும்.

* முன்னுரிமை மதிப்பெண் பூச்சியம் என இருந்தது, முழு மதிப்பெண்ணான 5 ஆக திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PET teachers counselling issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->