#தமிழகம் || ஈ தொல்லை - மாபெரும் போராட்ட எச்சரிக்கையை கொடுத்த மக்கள்.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம், திம்மநாயக்கன்பாளையம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த ஒரு வார காலமாக ஈ தொல்லையால் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 

இந்த கிராமத்தில் தேனீர் அருந்தும் போதும், உணவு அருந்தும் போதும் ஈக்கள் விழுந்து விடுகின்றன. மேலும், வீட்டில் இருக்கும் மளிகை பொருட்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள், பாத்திரங்கள் மீதும் ஈக்கள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன. இதனால் அவர்கள் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.

கோழிப்பண்ணையில் இறக்கும் கோழிகள் அனைத்தையும் ஆங்காங்கே வீசி விடுகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் ஈக்களின் தொல்லை மிகுந்து காணப்படுகிறது. இந்த ஈக்களால் பலருக்கு  தொண்டை நோய் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலகர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர் போன்றவற்றிற்கும் மனு அளித்துள்ளனர். அவர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pest issue near kovai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->