பெரியாருக்கு காவி வேஷம்.. கோவையில் தரமான சம்பவம்.! முக்கிய அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


கடவுள் நம்பிக்கையாளர் களுக்கும், மறுப்பாளர்களுக்கும் இடையே சமீபகாலமாக சமூக வலை தளங்களில் பல்வேறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகின்றன. கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில், கந்தசஷ்டிகவசம் குறித்து அவதூறாகப் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

இதுகுறித்து, இந்து அமைப்புகள் பல அந்த யூடியூப் சேனல் மீது, வழக்கு தொடுத்தது. எனவே, அந்த யூடியூப் சேனல் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில், இரு தரப்புக்கும் இடையே மோதல் இருந்து வருகின்றது. 

தமிழகத்தில், மதரீதியான மோதலை ஏற்படுத்துவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கோவை பகுதியில் இருக்கும் பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயத்தை பூசி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து திராவிட கட்சியினர், 'பெரியார் சிலைக்கு அவமதிப்பு ஏற்பட்டதாகவும், இதனை கண்டித்து போராட்டம் செய்யப் போவதாகவும்' அறிவித்துள்ளனர். அப்பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்த அருண் கிருஷ்ணன் என்ற இளைஞர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Periyar statue painted by Hindus 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->