மகனை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட தம்பதி.. பெரம்பலூரில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாண்டகபாடி கிராமத்தை சார்ந்தவர் முத்தையன் (வயது 29). இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில், பல வருடமாக வெளிநாட்டில் பணியாற்றி கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக ஊர் திருப்பினார். இவர் வெளிநாட்டில் இருந்த நேரத்தில் சம்பாரித்த பணத்தை தந்தையிடம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். 

இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, தந்தையும் மகனும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர். முத்தையனின் தந்தையான ராமசாமியும், முத்தையனின் தாய் சரஸ்வதி ஒரு இல்லத்திலும், பக்கத்து வீட்டில் முத்தையனும் இருந்துள்ளனர். இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாக தெரியவருகிறது. 

இந்நிலையில், நேற்று வழக்கம்போல இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தந்தை மகனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக்கொண்ட சூழலில், கணவனும் - மனைவியுமாக அடித்ததில் முத்தையன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மகன் இறந்ததை உணர்ந்த இருவரும் மகனை தூக்கில் மாட்டியுள்ளனர்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடிய நிலையில், உடலை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்துள்ளது. இதில் தீடீரென ஊர்காரர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இந்த தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், முத்தையனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், தம்பதிகள் இருவரும் தங்களது மகனை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perambalur son murder by parents due to torture police arrest couple


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->