பெரம்பலூரில் பாலியல் வழக்கில் போலி ஆடியோவை வெளியிட்ட வக்கீல்!! நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!!  - Seithipunal
Seithipunal


அதிமுக பிரமுகர், பெரம்பலூரில் வேலை வாங்கி தருவதாக கூறி, கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், அவரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், பாதிக்கபட்ட பெண் ஒருவர் செல்போனில் பேசிய ஆடியோ என்று கூறி வக்கீல் அருள் ஒரு போலி ஆடியோவை பதிவு செய்துள்ளார்.

இதற்கு அவரது உதவியாளர் கலையரசி உடந்தையாக இருந்துள்ளார். எனவே, இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் கலையரசியையும், கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நேற்று மாலை அருளை ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். அவரை வருகிற 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அருளின் உதவியாளரான கலையரசி ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார் கலையரசி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PERAMBALUR ISSUE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->