முயல் வேட்டை..! வனத்துறையினர் அதிரடி..! - Seithipunal
Seithipunal


முயல் வேட்டையில் ஈடுபட்டவர்களை வனதுறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்து வனபகுதி ஒன்று உள்ளது. இந்த வனபகுதியில் பல்வேறு விலங்குகள் உள்ளன. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் இருந்து வந்த 15 பேர் கொண்ட கும்பல் முயல் வேட்டையில் ஈடுப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் வனப்பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது முயல் வேட்டையில் ஈடுப்பட்ட கும்பலை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா கல்லை கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்பலம் (வயது 60), செல்வம் (30), சரவணன் (24), கண்ணுசாமி (38), மோகன்ராஜ் (21) உள்பட 15 பேர் என்பது தெரியவந்தது.

இவர்கள் அனைவரும் முயல் வேட்டைக்காக இந்த வனப்பகுதிக்கு வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அவர்களிடம் இருந்து வேட்டையாடப்பட்ட உபயோகம் செய்யும் ஆயுதங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பதினெட்டு பண்டிகை முடிந்த பிறகு ஊர் ஊராகச் சென்று முயல் வேட்டையாடி தங்களது கிராமத்தில் உள்ள சாமிக்கு படையல் வைப்பர். இந்த ஆண்டு விழா கொண்டாட வந்தவர்கள் வனத்துறையில் பிடிப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perambalur Forest Dept Arrest Animal Hunting persons


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->