'கொரோனா! ஹெல்ப் பண்ணுங்க' வீட்டில் புகுந்து வில்லங்கம் செய்யும் திருடர்கள்.! உஷார்.!  - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் சண்முகா  காலனியைச் சேர்ந்த ரங்கராஜன் என்ற 28 வயது முதியவரிடம் செயின் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

மூன்று நாட்களுக்கு முன்பாக ரங்கராஜ்(78) வீட்டில் இரவு 8 மணிக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது உறவினர்கள் வந்து இருப்பார்கள் என்று நினைத்த அவர் கதவை திறந்துள்ளார். வெளியில் நின்றுகொண்டிருந்த 4பேர் வீட்டுக்குள் புகுந்து, ஊரடங்க்கில் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவி வழங்க நிதி வசூலிக்கிறோம். உங்களால் முடிந்த பொருட்களை கொடுங்கள் என்று கேட்டுள்ளனர்.

அவர்களுக்கு உதவும் நோக்கில் ரங்கராஜன் பொருட்களை எடுக்க உள்ளே சென்று ஒரு பையில் அத்தியாவசிய பொருட்களை எடுத்து வந்து நீட்ட ரங்கராஜன் அணிந்து இருந்த நான்கு சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு, அவர்கள் வெளியில் நின்றிருந்த ஆட்டோவில் தப்பியோடி இருக்கின்றனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் காவல் நிலையத்தில் புகாரளிக்க அவர்கள் சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த நான்கு திருடர்களையும் பிடித்துள்ளனர். தங்களுடைய வீட்டில் அவர்கள் மறைத்து வைத்திருந்த 4 சவரன் நகையை மீட்டு ரங்கராஜிடம் கொடுத்தனர். அவசர காலத்தில் உதவி என்ற பெயரில் எவராவது வீட்டிற்கு வந்தால் பொதுமக்கள் அனைவரும் சற்று உஷாராக இருங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples theft like corona fund collector


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->