வெறிச்சோடிய வேதாரண்யம் கடற்கரை..! காவல் துறையினர் கண்காணிப்பு..! - Seithipunal
Seithipunal


ஆடி அமாவாசையை முன்னிட்டு நீர் நிலைகளில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து புனித நீடாடுவர். குறிப்பாக வேதாரணயம் கடற்கரையில் தர்பணம் கொடுக்க வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வருவர். இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் வேதாரண்யம் கடற்கரையில் புனித நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதனை முன்னிட்டு காவல்துறையினர் கடற்கரைக்கு வரும் வழிகளில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறியாமல் சில பக்தர்கள் கடற்கரைக்கு வந்துள்ளனர். அவர்களை போலீசார் தடை உத்தரவை கூறி திருப்பி செல்ல வைத்தனர்.

அது மட்டுமின்றி தாணி கொட்டகம், தாமரைபுலம், சங்கத்தலை பாலம் ஆகிய இடங்களில் பக்தர்கள் நீராட கூடாது  என விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக முதல் நாளே கடற்கரைக்கு வந்து தங்கி கடலில் நீராடி செல்வர். இந்த தடை உத்தரவால் அந்த பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் திருவையாறு  காவேரி படித்துறையிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திருப்பி சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People Ban on the beach due to covid


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->