பட்டுக்கோட்டை அருகே மழை நீரில் மிதக்கும் நெற்பயிர்கள்.. விவசாயிகள் வேதனை! - Seithipunal
Seithipunal


தொடர் கனமழையால், நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் மழை நீரில் மூழ்கியுள்ளதால், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் சுமார் 250 ஹெக்டர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து நடுவிக்கோட்டை ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, கடந்த 20 நாள்களுக்கு முன்பு சுமார் 15,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் கொள்முதல் நிலையத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர்.

இதனால், விவசாயிகள் கடந்த 20 நாட்களாக நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திற்கு முன்பு போட்டுவிட்டு  இரவும், பகலும் காவல் காத்து வருகின்றனர். மேலும், கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால், நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் மழை நீரில் மூழ்கியுள்ளன.

இதனை தொடர்ந்து, அறுவடை செய்த நெற்பயிர்கள் கொள்முதல் செய்யப்படாமல் மழை நீரில் நனைகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி உள்ளனர். ஏக்கருக்கு 25,000 வரை செலவு செய்துள்ள நிலையில், செலவு செய்த தொகை கூட கிடைக்குமா என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

மேலும், அரசு உடனடியாக மழை நீரில் கிடக்கும் நெல்லை எந்த நிபந்தனைகளும் இன்றி கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், மழை நீரின் மூழ்கிக் கிடக்கும் நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

patukottai heavy rain paddys full damage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->