குடிநீரை ஆராய்ச்சி செய்ததில் அதிர்ச்சி ரிப்போர்ட்!! காவிரி நீரில் கலப்படம்.,அதிர்ச்சியில் பொதுமக்கள்!!  - Seithipunal
Seithipunal


மேட்டூர் அணையிலிருந்து சேலம்-ஆத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக, தினமும் 70 மில்லியன் லிட்டர் குடிநீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதன்மூலம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் மற்றும் 1,345 வழியிடை கிராமங்கள் பயன் பெறுகின்றன. 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட குடிநீர் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் புகார் எழுந்தது. மேலும், நிறம் மாறி வந்ததால் அதிர்ச்சியடைந்த மக்கள், அதனை பாட்டில்களில் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து, குடிநீர் வடிகால் வாரிய தலைமை நீர் பகுப்பாளர் கோபால் தலைமையிலான குழுவினர், நேற்று சென்னையிலிருந்து மேட்டூர் சென்று எடுக்கப்படும் பகுதியில், நீர் மாதிரியை எடுத்து அங்கேயே ஆய்வு செய்தனர். இதில், குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரில் அமோனியா, பாஸ்பேட் அளவு அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இது குறித்து, குடிநீர் வடிகால் வாரிய தலைமை நீர் பகுப்பாளர் கோபால் கூறுகையில், "காவிரி ஆற்று நீரில் அமோனியா லிட்டருக்கு 0.5 மில்லி கிராம் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், 1 முதல் 1.5 மில்லி கிராம் அமோனியா உள்ளது. அதேபோல், பாஸ்பேட் என்பதும் சுத்தமாக இருக்க கூடாது. ஆனால், 2 மில்லி கிராம் கலந்துள்ளது. இதனாலேயே, தண்ணீர் நிறம் மாறியதுடன் துர்வாடையும் வீசுகிறது" என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

paspet and ammonia in drinking water


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->