கண்ணீர் விடும் தொண்டர்கள்.. கலங்கி நிற்கும் கட்சிகள்.. பேரதிர்ச்சியில் தலைவர்கள் - கரணமடிக்கும் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


அதிமுக, திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வரும் நிலையில், தனித்து போட்டி என்று அறிவித்த சில கட்சிகள் தங்கள் சின்னத்தை 30 நாட்களில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இன்னும் சில கட்சிகள் 39 தொகுதிக்கும் வேட்பாளர்களை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தங்களுடன் எஸ்.டி.பி.ஐ என்ற கட்சியை கூட்டணிக்கு சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கி விட்டு 38 தொகுதிகளில் களம் காண தயாராகி வருகின்றது. குக்கர் சின்னம் உறுதி செய்யப்படாவிட்டால் கிடைக்கும் புதிய சின்னத்தை 30 நாட்களில் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவேண்டிய நிலை அமமுக தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு இந்த முறை இரட்டை மெழுகு வர்த்தி சின்னம் கிடைக்கவில்லை..! இந்த முறை நாம்தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை 19 ஆம் தேதி தொண்டர்களிடம் முறைப்படி அறிவிக்க உள்ளார் சீமான்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் , கமல் டார்ச் லைட்டுடன் சென்று சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சித்து வருகிறார்.

40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அறிவித்த சமத்துவ மக்கள் கட்சி 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

English Summary

party symbol issue for aamk,ntk


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal