செல்போனுக்கும், டிவிக்கும் சொல்லுங்க..'நோ' - தமிழக அரசு..! - Seithipunal
Seithipunal


குழந்தைகள் தின நாளில் பெற்றோர்கள் செல்போன் உள்ளிட்ட சாதனங்களை அப்புறப்படுத்திவிட்டு தங்களுடைய குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று தமிழக கல்வி அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கின்றது.

நவம்பர் 14ஆம் தேதி (நாளை) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது. இது நல்ல பலனை கொடுக்க தொடங்கியிருக்கின்றது. பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் தினம் குறித்த வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் உங்களுடைய பெற்றோர் செல்போன் பயன்படுத்தாமல், நீங்களும் செல்போன் பயன்படுத்தாமல் பேசி ஒன்றாக நேரத்தை செலவிடுங்கள் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு கூறிய ஒரு மணி நேரத்தை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு நாளும் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தனிப்பட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும் என ஆசிரியர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குழந்தைகள் மதிப்பெண்களை பெற வேண்டும் என்று, எப்பொழுதும் டியூஷன் வகுப்புகள் முடுக்கி விடுவதே பெற்றோர்கள் கௌரவமாக நினைக்கின்றனர் ' என்ற குற்றச்சாட்டும் ஆசிரியர்கள் சார்பில் எழுகின்றது.

எது எப்படியோ தமிழக அரசு முன்னெடுத்த விஷயமானது, மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்வது பெருமைப்பட வேண்டிய விஷயம் தான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

parent dont use cellphone and tv


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->