பாண்டியன் எக்ஸ்பிரஸிற்கு இன்று என்ன நாள் தெரியுமா?..! கொண்டாட்டத்தில் மதுரை இரயில்வே அதிகாரிகள்., பயணிகள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக மதுரையில் இருந்து திருநெல்வேலி., தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்திற்கு இரயில் சேவையானது இருந்து வந்தது. இந்த தருணத்தில்., மதுரையில் இருந்து சென்னைக்கு தேவைப்பட்ட இரயில் சேவையின் காரணமாக கடந்த 1969 ஆம் வருடத்தில் பாண்டியன் அதிவிரைவு வண்டி அறிமுகம் செய்யப்பட்டது. 

தனது முதல் பயணத்தை நீராவி எஞ்சினில் துவங்கிய பாண்டியன் அதிவிரைவு வண்டியானது., தனது முதல் ஓட்டுநரான தேவராஜ் (தற்போதைய வயது 76) என்பவரை தேர்வு செய்தது. இது குறித்து தற்போது தேவராஜ் கூறியதாவது., 

pandian express, பாண்டியன் அதிவிரைவு வண்டி.

மதுரையில் இருந்து சென்னைக்கு முதன் முதலாக பாண்டியன் அதிவிரைவு இரயிலை இயக்கிய தருணங்கள் மனதில் இருந்து நீங்காதவை. மேலும்., அப்போது நீராவி எஞ்சினில் நான் இயக்கியது இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. நீண்ட காலத்திலான மக்கள் கோரிக்கையை அடுத்து., கடந்த 1969 ஆம் வருடத்தில் பாண்டியன் அதிவிரைவு இரயில் சேவை துவக்கப்பட்டது. 

அன்றைய காலத்தில் ஒற்றை நீராவி எஞ்சின் மூலமாக 9 பெட்டிகள் இழுத்து செல்லப்பட்டது. இதற்கு பின்னர் இரட்டை எஞ்சின் சேர்க்கப்பட்டு சுமார் 18 பெட்டிகள் இழுத்து செல்லப்பட்டது. இதற்குப்பின்னர் ஏற்பட்ட வளர்ச்சியை அடுத்து கடந்த 1974 ஆம் வருடத்தில்., நீராவி எஞ்சின் நீக்கம் செய்யப்பட்டு., டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டது. 

pandian express, பாண்டியன் அதிவிரைவு வண்டி. பாண்டியன் எக்ஸ்பிரஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்,

டீசல் என்ஜினிற்கு பின்னர் மீட்டர்கேஜ் இரயில் பாதையும் நீக்கம் செய்யப்பட்டு., அகல இரயில் பாதையானது கொண்டு வரப்பட்டு., தற்போது 22 பெட்டிகள் வரை இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இப்போதுள்ள நிலையில் எடை குறைவான பெட்டிகள் இருப்பதால்., எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறது. 

அன்றைய காலங்களில் இரயில் இயக்கம் சமயத்தில் சுமார் 13 மணிநேரங்கள் ஆகும். இப்போதுள்ள நிலையில் சுமார் 120 கிமீ வேகத்தில்.,7 மணிநேரத்திலேயே சென்னையை அடைந்துவிடுகிறோம். டீசல் எஞ்சினின் வருகைக்கு பின்னரே., இரயிலின் வேகம் அதிகரித்தது. இந்த நிகழ்வினை கொண்டாடும் விதத்தில்., இரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் இரயில்வே அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடினர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pandiyan express train birthday today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->