ஊராட்சி தலைவராக வெற்றி பெற்ற ஒரே நாளில் நேர்ந்த துயரம்.. சோகத்தில் கிராமவாசிகள்..!  - Seithipunal
Seithipunal


மிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று  நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பின்னர், சில காரணங்களால் வாக்கு எண்ணிக்கை சற்று தாமதம் ஆனது. இதன் காரணமாக பல இடங்களில் இரவும் பகலுமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. 

இதை தொடர்ந்து, நேற்று மாலையே ஒரு சில இடங்களில் முடிவுகள் வெளியிடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனூர் கிராமத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு  மணிவேல் (64) என்பவர் போட்டியிட்டார். இதனால், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில்  962 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று சான்றிதழையும் வாங்கினார். 

பின்னர், இன்று காலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்ப்பட்ட காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே மணிவேல் உயிரிழந்து விட்டார். இதை தொடர்ந்து, அவரது சடலத்தை கிராமத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுப் பதவியேற்பு நிகழ்வு நடைபெறுவதற்கு முன்பு மணிவேல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

panchayat leader dead by heart attack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->