பொங்கிப் பெருகும் தண்ணீரின் அழகு... பம்பர் அருவி...!! - Seithipunal
Seithipunal


கொடைக்கானலில் இருந்து ஏறத்தாழ 4கி.மீ தொலைவிலும், பெரிய குளத்தில் இருந்து ஏறத்தாழ 73கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய இடம்தான் பம்பர் அருவி.

இயற்கை இன்னும் இயற்கையாகவே இருக்கும் இடம் கொடைக்கானல். கொடைக்கானல் கோடை விடுமுறைக்கு பிரபலமான கோடை வாச ஸ்தலமாகும். 

மரங்களுக்கு அடைக்கலம் தரும் மலைகள், இதுவரை பார்த்திராத பறவைகள் என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம் தரும் இடம். 

குளிர்ந்த பனிமூட்டத்துடன் கூடிய மேகங்கள் சூழ்ந்த உயர்ந்த, அடர்ந்த மரங்களைக் கொண்ட வனப்பகுதியாக இருப்பதால் ஆண்டு முழுவதும் மக்களை மிகவும் கவருகிறது. 

ஏரி, நீர்வீழ்ச்சி மற்றும் புல்வெளிகள் ஆகியவற்றில் நடப்பதும், மிதிவண்டியில் செல்வதும் குதிரைகளில் செல்வதும் மிகவும் மக்களைக் கவருகிறது. இந்த அழகிய இடங்களில் ஒரு பகுதிதான் பம்பர் அருவி.

பம்பர் அருவியிலிருந்து கீழ்ப்பாய்ந்து வரிசையான பாறைகள் வழியே நெளிந்து பொங்கிப் பெருகும் தண்ணீரின் அழகு வசீகரத்தின் உச்சக்கட்டம். 

இந்த அருவிக்கு கிராண்ட் கேஸ்கட் என்றும், லிரில் அருவி என்ற பெயரும் உண்டு. 

பம்பர் ஹவுஸ் பின்புற வழியில் தொலைவாக உள்ள ஒரு செங்குத்துச் சரிவின் வழியாக இந்த அழகிய அருவியை அடையலாம். 

பம்பர் அருவிக்கு அருகிலேயேதான் தூண்பாறை உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pambar falls


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->