முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் தொகுப்பு மானியம்..! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழகத்திலிருந்து ராணுவப் பணியில் சேர்ந்து பயிற்சி பெறும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளை உற்சாகப்படுத்தும் வகையில் தொகுப்பு நிதியிலிருந்து தொகுப்பு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 

இதன்படி, முப்படையில் நிரந்திர படைத்துறை அலுவலர் பணிக்கு தேர்வுப்பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், குறுகிய கால படைத்துறை அலுவலர் பணிக்கு தேர்வுப் பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ. 500000மும் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர பதவிகளின் பணிக்காக தேர்வுப் பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.25000மும் வழங்கப்பட்டு வருகிறது. 

எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் கைம்பெண்கள் தங்களது குழந்தைகளை இந்திய இராணுவ பணிகளில் சேர்ந்திட ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்கள் அறிய நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் அறை எண். 10 மற்றும் 11-ல் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (04365-299765) தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

packege grant ex serviceman chindrens encourege


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->