சர்தார் பூட்டா சிங் மறைவு... சிதம்பரம் இரங்கல்..! - Seithipunal
Seithipunal


சர்தார் பூட்டா சிங் கடந்த 21 மார்ச் 1934 ஆம் வருடம் பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டம் முஸ்தபாபூரில் மசாபி பகுதியில் பிறந்தார். ஜலந்தரில் உள்ள லியால்பூர் கல்சா கல்லூரியில் கல்வி கற்ற இவர், பி.ஏ. மற்றும் எம்.ஏ படிப்புகளை மும்பையில் உள்ள குரு நானக் கல்சா கல்லூரியில் நிறைவு செய்தார்.

கடந்த 1964 ஆம் வருடத்தில் மஞ்சித் கவுர் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தனது துவக்க வாழ்க்கையை பத்திரிகையாளராக தொடங்கிய சர்தார் பூட்டா சிங், துவக்கத்தில் பத்திரிகையாளராக பணியாற்றி பின்னாளில் அரசியல்வாதியாக மாறினார். 

இந்நிலையில், பக்கவாதம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சர்தார், தனது 86 வயதில் இயற்கையை எய்தியுள்ளார். இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் பூட்டா சிங் காலமானது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. 

கடந்த 1985 -1989 ஆம் வருடத்தில் காங்கிரஸ் அரசாங்கத்தின் போது அவருடன் பணியாற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

P Chidambaram Regret to Buta Singh Passed Away


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->