திருமணமாகாத ஆண், பெண் ஒரே அறையில் தங்கினால் தவறில்லை- உயர்நீதிமன்றம் அதிரடி.!  - Seithipunal
Seithipunal


வெளியூரிலிருந்து வருபவர்கள் ஆன்லைன் மூலமாக தங்குவதற்கு விடுதிகள் மற்றும் சிறு, பெரு நகரங்களில் அதிகமாகி வருகின்றது. அந்த வகையில், கோவை நவ இந்தியா பகுதியில் ஓயோ நிறுவனம் சார்பில் அபார்ட்மென்ட்கள் வாடகைக்கு விடப்படுகின்றது. அங்கே திருமணமாகாத ஆண், பெண் தங்கினால் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.

மாதர் சங்கத்தினர் இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். அந்த மனுவில், "ஏற்கனவே கோவையில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற கலாசார சீரழிவு நடவடிக்கையை ஓயோ நிறுவனம் எடுத்துள்ளது. எனவே அந்த சர்வீஸ் அபார்ட்மெண்டுக்கு சீல் வைக்க வேண்டும்." என்று கூறப்பட்டிருந்தது.இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி அதற்கு சீல் வைக்க உத்தரவிட்டார். 

இந்த உத்தரவை எதிர்த்து உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் வழக்கை விசாரித்து, "திருமணமாகாத ஆண், பெண் தங்குவதாக பத்திரிக்கையில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டுதான் மூடப்பட்டிருக்கின்றது.

அதாவது திருமணமான ஆணும், பெண்ணும் தங்குகிறார்கள் என்பதற்காக இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டிருக்கின்றது. திருமணமான ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்கினால், அதில் தவறு என்ன இருக்கின்றது.? இதனை தவறு என்று சட்டம் சொல்லவில்லை. திருமணமாகாத ஆணும் பெண்ணும் தம்பதிகளாக வாழ்ந்தால் கூட எந்தவிதமான குற்றமும் இல்லை.

அப்படி இருக்கும் பொழுது, இது மட்டும் எப்படி குற்றமாகும்.? அறையில் மதுபாட்டில் கிடைத்தால் மட்டுமே, இவர்கள் மது விற்பனை செய்கிறார்கள் என்று கூறிவிடமுடியாது. மாவட்ட நிர்வாகம் சரியான வழிமுறையை பின்பற்றவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் ஓயோ நிறுவனத்தின் அபார்ட்மெண்டை திறக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டு இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

oyo rooms issue in kovai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->