ஆக்ஸ்போர்ட் பல்கலை. கொரோனா தடுப்பூசியால் பயங்கர பக்கவிளைவு.. சென்னை தன்னார்வலர் கடுமையாக பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


கொரோனா தடுப்பூசி மருந்தால் பக்க விளைவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை மக்களுக்கு பயன்படுத்த வேண்டாம் எனவும் சென்னையை சார்ந்த தன்னார்வலர் பரபரப்பு சம்பன் வழங்கியுள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணாநகரை சார்ந்த 40 வயதுடைய தொழிலதிபர், கடந்த அக்டோபர் மாதத்தில் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதன்பின்னர், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் கொரோனா தடுப்பூசி மருந்து தன்னார்வலர் என்ற முறையில் செலுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், போரூரில் உள்ள இராமச்சந்திரா மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தை செலுத்திய 14 நாட்களுக்கு கடுமையான தலைவலியால் அவதியுற்றுள்ளார். 14 நாட்களுக்கு பின்னர் தனது சொந்த மனைவியை கூட அடையாளம் காண இயலாத அளவிற்கு மறதி ஏற்பட்டுள்ளது. 

இதன்பின்னர் உடல்நிலை மிகவும் கடுமையான அளவு மோசமடையவே, தான் வழக்கமாக செய்யும் பணிகளை கூட செய்ய இயலாமல் தவித்துள்ளார். மேலும், அதிகளவு கோபம் போன்ற பல்வேறு உடல் மாற்றத்தால் அவதியுற்றுள்ளார். 

கொரோனா தடுப்பூசியை தன்னார்வலராக செலுத்திக்கொண்டு, பல்வேறு துன்பங்களை அனுபவித்ததை தொடர்ந்து, மக்கள் யாருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியை செலுத்த வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார். 

மேலும், தனக்கு கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், போரூர் இராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் ஐ.சி.எம்.ஆர் நிர்வாகம், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நிர்வாகம் உட்பட 6 தரப்பு ரூ.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும் சம்பன் வழங்கியுள்ளார். 

இந்த தடுப்பூசியை மக்கள் யாருக்கும் பயன்படுத்த வேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் இருந்து நல்ல பதிலை எதிர்பார்ப்பதாகவும் தனது சார்பு வழக்கறிஞர் மூலமாக தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி கிடைக்க இன்னும் சில வருடங்கள் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் கூறிவரும் நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயார் செய்த கோவிட் ஷீல்ட் தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oxford Covid Shield Vaccine Side Effect Heavy, Chennai Volunteer affected Hardly


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->