இனி இது இல்லாமல் "ஏ.டி.எம்..மில் பணம் எடுக்க முடியாது" வங்கி கொடுத்த அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


புதிய தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்கள் ஏடிஎம்க்கு செல்லும் நிலை மாறி, தற்போது அவரவர் செல்போன் மூலமாகவே பணபரிவர்த்தனை செய்து வருகின்றனர். புதிய புதிய தொழில்நுட்பத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கும் நிலையில், அதே தொழில்நுட்பத்தை  பயன்படுத்தி கொள்ளை சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இத்தகைய சூழலில், ஏடிஎம்.மில் பணம் எடுக்கும்போது ஒருமுறை மட்டும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு செல்லுபடியாகும் OTP எண் வழங்கும் திட்டத்தை வருகிற 18 ஆம் தேதி முதல் பாரத ஸ்டேட்  வங்கி  அமல்படுத்த உள்ளது. ஏடிஎம் மையங்களில் நடைபெறும் மோசடி மற்றும் முறைகேடுகளை இந்த புதிய திட்டம்  குறைக்க உதவும். 

மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் பொதுத்துறை வங்கியும், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வரும் 18 ஆம் தேதி முதல் தேதியிலிருந்து, அனைத்து எஸ்பிஐ ஏடிஎம் மையங்களிலும் ஒன் டைம் பாஸ்வோர்ட் முறை அமல்படுத்தப்படுவதாக தனது  வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது. அதாவது, ஏடிஎம்மில் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்க OTP நடைமுறை அமல்படுத்த உள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போனுக்கு வரும் OTP பயன்படுத்தியே பணம் எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம் பயன்படுத்தும் சமயத்தில் அவர்களையே அறியாமல் பாஸ்வோர்டுகளை கண்டுபிடித்து வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கும் சம்பவம் அதிகரிக்கிறது. இது போன்ற மோசடியில் இருந்து தனது வாடிக்கையாளர்களை காக்கும் பொருட்டு பாரத் ஸ்டேட் வங்கி இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய முறையால் மக்கள் ஏடிஎம்க்கு சென்றால் செல்போனையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் நிலவுவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

otp is must for withdraw the money from atm


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->