ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றாத தேவநாதன் யாதவ்: உடனடியாக கைது செய்ய உத்தரவு..!
Orders immediate arrest of Devanathan Yadav for not fulfilling bail conditions
முதலீட்டாளர்களிடம் பல கோடி மோசடி செய்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக மயிலாப்பூர் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றாததால் உடனடியாக அவரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.
தேவநாதனை கைது செய்ய சென்னை முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதி நிறுவனம் நடத்தி முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தேவநாதன் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் நிதி நிறுவன இயக்குநர் தேவநாதன் உள்ளிட்டோர் 03-வது முறையாக ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
தேவநாதன் யாதவ் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின் படி 100 கோடி ரூபாய் செலுத்தவில்லை. நீதிமன்ற உத்தரவுபடி காவல் நிலையத்தில் சரணடையவில்லை என முதலீட்டாளர்கள் தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார். நீதிமன்ற ஜாமீன் நிபந்தனையின் படி, ரூ.100 கோடி செலுத்தாவிட்டால் தேவநாதனை கைது செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

'தி மைலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்' நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நிதி நிறுவன இயக்குநர் தேவநாதன் உள்ளிட்டோர் மூன்றாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அக்டோபர் 30 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். மேலும், 100 கோடி ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில் வைப்புத்தொகையாகச் செலுத்த வேண்டும் என்றும், விசாரணைக்குத் தேவையான போது, அவர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்றும், காவல் துறை அனுமதி இன்றி வேறு எங்கும் செல்லக் கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இந்த வழக்கானது நீதிபதி கே.ராஜசேகர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அப்போது தேவநாதன் யாதவ் சரணடைய மேலும் ஒரு வாரம் அவகாசம் அளித்த நீதிபதி வழக்கை மீண்டும் நீதிபதி ஜெயசந்திரன் முன்பாக பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முதலீட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர். திருமூர்த்தி, தேவநாதன் யாதவ் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின் படி 100 கோடி ரூபாய் செலுத்தவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுபடி காவல் நிலையத்தில் சரணடையவில்லை என முறையிட்டார். மேலும், கால அவகாசம் வழங்கியும், அந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
''நீதிமன்ற ஜாமீன் நிபந்தனையின் படி ஞாயிற்றுக்கிழமை தேவநாதன் யாதவ் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்க வேண்டும். ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் அவரை காவல் துறையினர் கைது செய்வார்கள்'' என்று இந்த முறையீட்டினை விசாரித்த நீதிபதி ஜெயச்சிந்திரன் தெரிவித்தார். இந்நிலையில், யாதவ் ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றாததால் உடனடியாக அவரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.
English Summary
Orders immediate arrest of Devanathan Yadav for not fulfilling bail conditions