#தமிழகம் || லெஃப்டா., ரைட்டா., கன்ஃபியூஸ் ஆன மருத்துவர்., ராங் ஆப்ரிரேஷன்., பரிதவிக்கும் மூதாட்டி.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மூதாட்டி ஒருவருக்கு வலது காலில் ஆபரேஷன் செய்வதற்கு பதிலாக, இடது காலில் ஆபரேஷன் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கல்குவாரியில் பணிபுரிந்து வரும் குருவம்மாள் என்ற மூதாட்டி, தனது வலது கால் வலி பிரச்சனைக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குருவம்மாள் வலது காலில் தீராத வலி ஏற்பட்டதால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர் முடிவு செய்தார். ஆனால் அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக வலது காலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர், பாதிக்கப்பட்ட மூதாட்டி குருவம்மாள் குருவம்மாள் இடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் குழுவினர் இடமும் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து மூதாட்டிக்கு தவறாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் சீனிவாசனை ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். 

மேலும், சம்பவம் தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு, மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மூதாட்டி வலது காலில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குன தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

operation wrong in kovilpatti govt hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->