தமிழகத்தின் பிரபல சுற்றுலாத்தலத்தில் குவியும் மக்கள்.. பதறும் உள்ளூர் வாசிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மக்களுக்காகவும், பொருளாதாரத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் பயணம் செய்ய ஏதுவாக இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது. 

சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்வதை தடுக்க, இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரிக்கு செல்லும் மக்கள் அம்மாவட்ட நிர்வாகத்திடம் இ-பாஸ் பெற்று இருக்க வேண்டும். இந்நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்திற்குள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது. 

மேலும், வெளிமாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், சாலையோரம் நின்றபடி இயற்கையின் அழகையும் ரசித்து வருகின்றனர். மேலும், ஊட்டிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து வந்ததெல்லாம் அழகை ரசித்து வருகின்றனர். இதனைத்தவிர்த்து நட்சத்திர விடுதிகளிலும் மக்களின் செயல்பாடு அதிகரித்துள்ளது.

இவர்களிடம் மறைமுகமாக விசாரணை செய்கையில், அனைவரும் வியாபாரத்திற்கான இ-பாஸை பெற்று நீலகிரிக்கு வருகை தந்துள்ளதும் அம்பலமாகிறது. இவ்வாறாக போலியான இ-பாஸ் பெற்று வரும் மக்களை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை செய்து அனுப்பி வரும் நிலையில், சிலர் அங்கேயே தங்கியும் இருக்கின்றனர். இந்த விஷயத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ooty peoples panic due to Other District person visit Nilgiris


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->