தக்காளி ஏற்றி வந்த மினி லாரி.., ஆனால், உள்ளே சுமார் 600 கிலோ.! சுற்றிவளைத்து கைது செய்த தமிழக காவல்துறை.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம், கூடலூர் வழியாக கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு, புகையிலை பொருட்கள் கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதனை தொடர்ந்து, மைசூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தொரப்பள்ளி அருகே, நேற்று இரவு கூடலூர் காவல்துறையினர், வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர். 

காவல்துறையினர், மைசூரில் இருந்து தக்காளி, ஏற்றி வந்த மினி லாரி ஒன்றை சோதனை செய்த போது, அதில் 20 மூட்டைகளில் 600 கிலோ எடை கொண்ட 15.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை, கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

இதனை அடுத்து, காவல்துறையினர் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த லாரி மற்றும் அதில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். 

மேலும், காவல்துறையினர் போதைப் பொருட்களை கடத்தி வந்த கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் சாஜர் என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ootty police arrest kerala driver


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->