‘ஓரணியில் தமிழ்நாடு’ – ஆதார் விவரங்களை கேட்டு மிரட்டல்?மதுரை ஐகோர்ட்டில் வழக்கு! - Seithipunal
Seithipunal


ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையின்போது, பொதுமக்களிடம் ஆதார் விவரங்களை சேகரிக்க தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கடந்த ஜூலை 3-ம் தேதி சென்னை, ஆழ்வார்பேட்டையில் மக்களை நேரடியாக சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு என்ற திடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் திமுக நிர்வாகிகள், வீடு வீடாகச் சென்று, மக்களைச் சந்தித்து கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்த்து வருகின்றனர்.

இந்தநிலையில் தி.மு.க. சார்பில் நடைபெற்று வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின் போது, ஆதார் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களை கேட்டு பொதுமக்களை மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதையடுத்து  ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையின்போது, பொதுமக்களிடம் ஆதார் விவரங்களை சேகரிக்க தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை ஐகோர்ட்டில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது ,வீடு வீடாகச் செல்லும் தி.மு.க.வினர், ஆதார் எண், வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு விவரம், மொபைல் எண்கள் கேட்கிறார்கள்.

மறுத்தால், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும் என மிரட்டுகிறார்கள் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.மேலும், அனுமதி இன்றி முதல்வர் ஸ்டாலின் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை செயல் அதிகாரி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

One vote Tamil Nadu Is there intimidation over seeking Aadhaar details? Case in Madurai High Court


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->