தமிழகத்தில் இப்படியும் ஒருவரா?! வாரத்துக்கு 2  லிட்டர் பெட்ரோல் இலவசம் அறிவித்த முதலாளி.! - Seithipunal
Seithipunal


நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து, நாளுக்கு நாள் உயர்ந்து  கொண்டே சென்று கொண்டிருக்கிறது. இந்த பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த மத்திய -மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், அடித்தட்டு மக்கள் முதல் நடுத்தர வர்க்கம் வரை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விலை உயர்வு காரணமாக பலரும் தற்போது சைக்கிள் பயன்படுத்த முன்வந்துள்ளனர்.

இதனால், தமிழகத்தில் பழைய சைக்கிள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், பழைய சைக்கிள்களை சரி செய்யும் கடைகளிலும் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறது .

இந்த நிலையில், விடுமுறை எடுக்காமல் வாரம் முழுவதும் பணி செய்தால், இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசமாக தரப்படும் என்று, திருப்பூரை சேர்ந்த ஒரு பனியன் நிறுவனத்தின் முதலாளி அறிவிப்பு வெளியிட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை சராசரியாக 120 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், திருப்பூரை சேர்ந்த பனியன் கம்பெனி நிறுவன உரிமையாளர் ஒருவர், ஓவர்லாக், பேட்லாக் தையல் எந்திரம் ஓட்டும் ஊழியர்கள் வாரம் முழுவதும் விடுமுறை எடுக்காமல் பணி செய்தால், 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக தரப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதனை அவரது நிறுவனத்தில் விளம்பர பலகையாக எழுதி வைத்து, அவருடைய செல்போன் எண்ணையும் அதில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் வைரலாக பரவி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one comapy say two litter petrol free


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->