பெரம்பலூர் அரசு மருத்துவமணையில் செவிலியர் தினத்தை முன்னிட்டு கொண்டாட்டம்!!  - Seithipunal
Seithipunal


மக்கள் நல்வாழ்வுக்காக இரவு, பகல் என பாராமல் விசேஷ தினங்களிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செவிலியர் சேவை புரிந்து வரும் செவிலியர்களின் சேவை உண்மையில் போற்றத்தக்கது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நைட்டிங்கேல் என்பவர் மிகப் பெரிய செல்வச் செழிப்பு மிகுந்த குடும்பத்தில் பிறந்தார்.

ஆனால், அவர் தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக செவிலியர் சேவையை முழு அர்ப்பணிப்புடன் செய்து வந்தார். எனவே தான் அவர் பிறந்த நாளை உலக செவிலியர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று உலக செவிலியர் தினம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது. அங்கு பணி புரியும் செவிலியர்கள், மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உற்றார் உறவினர்களுக்கும் இணைப்பு கொடுத்து அதனை கொண்டாடினர்.

மேலும், சக செவிலியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் செவிலியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள மாணவிகளுக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்தும், கட்டி அரவணைத்தும் தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

ஒருசில செவிலியர்கள் தங்களது செல்போனில் செல்பி எடுத்து தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். அதன் பின்னர் அவர்கள் கட்டை விரலை உயர்த்தி எங்களது இலக்கினை அடைவோம் என உறுதியளித்தனர். பலர் செவிலியர் தினத்தில் பெற்றெடுத்த தாய் அரவணைக்கும் முன்பே அனைத்த கரங்கள் செவிலியர்கள் தான் என பதிவிட்டு வாழ்த்தி இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nurse day celebration in perambalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->