சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் எதிரொலி!! ஓட்டல் உரிமையாளர்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கமானது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் கடுமையான அவதியடைந்து வரும் நிலையில்., புயலால் மழை பெய்யும்., எதோ ஒரு சூழ்நிலையில் மழை பெய்யாதா? வெப்பம் சிறிதளவு தனியாதா? என்ற ஏக்கத்துடன் மக்கள் தவித்து வருகின்றனர். 

இந்த நிலையில்., சென்னையில் உள்ள சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் அடுத்தடுத்து வறட்சியை சந்திக்கவே., தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று மக்கள் கடும் அச்சத்தில்., வரும் நாட்களை எதிர்கொள்வதற்கு செய்வதறியாது திகைத்து வந்து கொண்டு இருந்தனர். இந்த நிலையில்., தண்ணீர் பஞ்சம் தனது கோர முகத்தை காட்ட துவங்கியது. 

தண்ணீர் இல்லாமல் மக்கள்., தொழிற்சாலைகள்., வணிக வளாகங்கள்., உணவு விடுதிகள் என்று அனைவரும் தவித்து வந்த நிலையில்., சென்னையில் உள்ள பெரும்பாலான உணவு கூடங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் மதிய சாப்பாடு உற்பத்தி நிறுத்தப்பட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும்., சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை வீட்டில் இருந்து பணி செய்ய அறிவுறுத்தியுள்ளது. 

இந்த நிலையில்,  சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் ரவி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார் அதில், ஓட்டல் உரிமையாளர்கள்  சாப்பாடு தயாரிக்க செலவிடுகின்ற விலையை விட தண்ணீருக்கு செலவழிக்கின்ற தொகை அதிகமாக இருப்பதால் தண்ணீர் பிரச்சினை மேலும்அதிகமானால் மதிய சாப்பாடு விற்பனையை நிறுத்துவது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. மதிய சாப்பாட்டை நிறுத்தினால் மட்டுமே பெருமளவு தண்ணீர் செலவு குறையும் என எதிர்பார்க்கிறோம்.

மேலும் அவர் கூறியதாவது காலையில் செய்யப்படும்  டிபன் வகைகள் இட்லி, தோசை, பூரி தயாரிக்க தண்ணீர் அதிகளவு பயன்படாது. ஆனால் மதியம் சாப்பாட்டிற்கு தேவையான அரிசி முதல் சாம்பார், ரசம், மோர் இவை அனைத்திற்கும் அதிகளவு தண்ணீர் தேவை. கூட்டு, பொரியல் என சிறு சிறு பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை கழுவுவதற்கு தண்ணீர் அதிகளவு செலவாகும். முன்னர் எல்லாம் 12 ஆயிரம் லிட்டர் டேங்கர் தண்ணீர் தொடக்கத்தில் ரூ.1800-க்கு கொடுத்தனர். பின்னர் ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டது. இப்போது தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் ரூ.5000 வரை கேட்கிறார்கள். இந்த விலையிலும் கூட தண்ணீர் கிடைக்காததால் ஓட்டல் நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.

சாப்பாடு விலையை விட தண்ணீருக்கு செலவழிக்கின்ற தொகை அதிகமாக இருப்பதால் தண்ணீர் பிரச்சினை இன்னும் அதிகமானால் மதிய சாப்பாடு விற்பனையை நிறுத்துவது தவிர வேறு வழியில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

not afternoon lunch in chennai hotels


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->