வடகொரிய தூதர், குடும்பத்துடன் தென்கொரியாவிற்கு தப்பி ஓட்டம்.! - Seithipunal
Seithipunal


கொரியா தீபகற்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே பல வருடமாக பகைமை சூழல் இருந்து வந்தது. கடந்த 2018 ஆம் வருடத்தில் இருநாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசிய பின்னர், பகைமை சூழல் விலக துவங்கியது. 

ஆனால், தென்கொரியாவின் போக்கை ஏற்றுக்கொள்ளாத வடகொரியா, தென்கொரியாவிற்கு எதிராக பல அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், இருநாட்டு அதிகாரிகளும் எல்லையில் சந்தித்து பேசும் கட்டிடத்தை வடகொரியா வெடிகுண்டு வைத்து தகர்த்தது. 

இந்நிலையில், தற்போது மீண்டும் வடகொரியா - தென்கொரியா இடையே மோதலானது வலுத்து வருகிறது. தற்போது வடகொரியாவின் அரசு எதிர்ப்பாளர்கள் தென்கொரியா, சீனா போன்ற நாடுகளுக்கு தப்பி சென்று அடைக்கலம் புகுந்து வரும் நிலையில், அதிகளவு இராணுவ கண்காணிப்பு உள்ள பகுதிகளை கடந்து அண்டை நாடுகளில் அகதியாக செல்கின்றனர். 

குவைத் நாட்டிற்கு தூதரக பணியாற்றி வந்த வடகொரிய அதிகாரி ரியூ ஹியூன் வூ, கடந்த செப்டம்பர் மாதத்தில் தனது குடும்பத்துடன் தென்கொரியாவிற்கு தப்பி சென்றதாக தென்கொரியாவின் தேசிய சட்ட புலனாய்வு குழு தெரிவித்துள்ளது குறித்த தகவல் தற்போது வெளியாகிஉள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea Kuwait Ambassador Escape with Family Now Live South Korea


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->