ரயிலுக்கு அடியில் சிக்கிய மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி., தீயணைப்புத்துறையினர் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் அருகில் ரயில் இன்ஜினுக்கு அடியில் சிக்கி தவித்த வடமாநில மூதாட்டியை தீயணைப்புத்துறையினர் போராடி உயிருக்கு சேதமின்றி மீட்டனர்.

வேலூர் மாவட்டம், சான்றோர்குப்பம் பகுதியில் சரக்கு ரயில் வந்துகொண்டு இருந்தது, இந்த நிலையில் மூதாட்டி தண்டவாளத்தில் நடந்து செல்வதை ஓட்டுநர் கவனித்திருக்கிறார். நல்ல நேரத்தில் அந்த ரயிலானது 30 கிலோ மீட்டர் வேகத்தில் வந்துகொண்டிருந்ததால் அதன் இயக்கத்தை ஓட்டுநர் உடனடியாக கட்டுப்படுத்த முயற்சி செய்தார்.

இருந்த போதிலும் 2 இஞ்சின்களைக் உடைய அந்த சரக்கு ரயில் மூதாட்டியை நெருங்கிவிடவே, அவர் உடனடியாக தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார். ரயில் முழுமையாக இயக்கத்தை நிறுத்தியபோது மூதாட்டி 2வது இஞ்சினுக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.

மூதாட்டியை மீட்கும் ரயில்வே போலீசாரின் முயற்சி தோல்வியுற்ற நிலையில், தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் இஞ்சினுக்கு அடியில் ஸ்ட்ரெச்சரைப் புகுத்தி, பெரும்போராட்டத்துக்குப் பின் மூதாட்டியை மீட்டனர்.

மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் காணப்பட்ட அந்த மூதாட்டி, இந்தியில் பேசியுள்ளார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

north indian old lady stuck under train


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->