விக்கிபீடியா இல்லை., இனி நித்திபீடியா., வெளியான புதிய வீடியோ! - Seithipunal
Seithipunal


ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, போலீசாரால் தேடப்பட்டுவரும் நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் கூட கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அவர், வரும் விநாயகர் சதுர்த்தியன்று அதை முறையாக அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நித்தியானந்தா தனது யூ ட்யூப் சேனலில் பேசி வெளியிட்டுள்ள ஒரு காணொளியில்,  விக்கி பீடியா போல தன்னை பற்றி அறிந்து கொள்ள நித்தியானந்தாபீடியா என்ற ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் கூறி இருக்கிறார். 

மேலும், தன்னை ஒன்றும் இல்லாத ஆண்டி என்றாலும் ஓகே தான், அதிபர் என்றாலும் ஓகே தான் என சிரித்துக்கொண்டே அந்த காணொளியில் பல கருத்துக்களை பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nithyananda you tube video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->