மார்ச் 25ம் தேதிக்கு முன்பு கடன் வாங்கியவர்கள் மீது நடவடிக்கை? மசோதாவை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்! - Seithipunal
Seithipunal


மாநிலங்களவையில் வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா இன்று நிறைவேறியது. வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ஒத்தி வைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

கடந்த மார்ச் 25ம் தேதிக்கு முன்பு (அதாவது கொரோனா ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்பு வரை) வங்கிகளில் கடன் வாங்கி அதைச் திருப்பி செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று வங்கி திவால் சட்ட திருத்த மசோதா குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

முன்னதாக வங்கி திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் தொழில் நிறுவனங்ககளின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வங்கி திவால் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்க விலக்கு அளிக்கும் வகையில் கடன் நொடிப்பு மற்றும் வங்கி திவால் சட்டம் 2020-ல் திருத்தும் செய்து மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. 

இந்த அவசரச் சட்டம் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அடுத்த 6 மாதங்கள் அல்லது அதற்கும் மேல் நீட்டிக்கபப்டும் வரை இந்த காலகட்டத்தில் கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் மீது  தற்காலிகமாக இந்த மசோதா மூலம் நடவடிக்கை எடுக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nirmala sitharaman make some changes in bank act


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->