நிபா வைரஸ் எதிரொலி : எல்லையில் பேருந்து சேவை நிறுத்தம்.!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தை சார்ந்த 12 வயது சிறுவன் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளாகி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அந்த சிறுவன் கடந்த 3 ஆம் தேதி மூளைக்காய்ச்சல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிசிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் நிபா உறுதியாகியுள்ளது. மேலும், கேரளாவில் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருப்பதால், மத்திய அரசின் தேசிய நோய் கட்டுப்பாட்டு குழுவின் சிறப்பு குழு கேரளாவுக்கு விரைந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கோழிக்கோட்டில் ஆய்வு செய்து மத்திய அரசிடம் நிபா வைரஸுக்கான காரணம் குறித்து அறிக்கையளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், கேரளாவில் மேலும் சிலருக்கு நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட காரணத்தினால் தமிழக - கேரள எல்லை பகுதிகளில் பேருந்து போக்குவத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக போடி மெட்டு வரை இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

மேலும் மாநில எல்லை சாலைகளிலும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்காக செல்லும் வாகனங்கள் மட்டும் உரிய பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றன. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nipah virus nipah Fever


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->