பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க புதிய யுக்தியுடன் களத்தில் இறங்கிய கலெக்டர்!! ஏற்பட்ட மாற்றம்!!  - Seithipunal
Seithipunal


பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க எண்ணிய நீலகிரி கள ஆய்வு மண்டல அலுவலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், ஊட்டி, குன்னூர், நெல்லியாளம் நகராட்சிகள் மற்றும் பதினொரு பேரூராட்சிகள் நான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்க்க,

பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், சுற்றுலா பயணிகள் மத்தியிலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

எனவே, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் ஊட்டி ஆகிய நான்கு மண்டலங்களில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்ளிட்டோர் குழுக்களாக பிரிந்து மாவட்டங்கள் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பொழுது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 28 பில்லியன் 100 கிலோ கிராம் கைப்பற்றப்பட்டது. மேலும், 74 ஆறுநூறு வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா இனி வரும் காலங்களில் வெளியூர் பயணிகளும், வியாபாரிகளும், பொதுமக்களும் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்த்து, நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்' என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nilgris collector says about plastic


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->