சுற்றுலாப்பயணிகளை கண்காணிக்க தனி குழு.. ஊட்டியில் கடுமையாகும் கொரோனா விதிமுறைகள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் 50 விழுக்காடு நபர்களை மட்டுமே அனுமதி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு கொரோனா வைரஸ் பரவலால் விதிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற சுற்றுலா தளங்களில் ஒருமணிநேரம் மட்டுமே பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் நீண்ட நேரம் பூங்காவில் நிற்காமல், புல்வெளிகளில் அமரால இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. ஒருவழியாக சென்று கண்ணாடி மாளிகையை பார்த்துவிட்டு, மற்றொரு பாதையில் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்கும் போது மட்டுமே முகக்கவசத்தை அகற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுத்த பின்னர் உடனடியாக முககவசம் அணிய வேண்டும். இதனை பூங்கா ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். 

கொரோனா விதிமுறையை மீறும் சுற்றுலா பயணிகளை கண்காணிக்கவும், அபராதம் விதிக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒரு நாளிலேயே சொந்த ஊர்களுக்கு திரும்பிவிடும் சூழலும் கொரோனாவால் ஏற்பட்டுள்ளது..

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்.. 

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளை, இயற்கையான பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உடல்நலத்தை பாதுகாத்திடுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiris Ooty Corona Virus Restiction Hardly 13 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->