"அவர் வருகிறார்" என திருமணத்தை நிறுத்திய மணப்பெண் விவகாரத்தில், புதிய திருப்பம்! மணப்பெண் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி!  - Seithipunal
Seithipunal


நீலகிரியில் கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய இளம்பெண், மணமகன் மீது பல்வேறு புகார்கள் உள்ளதாகவும், அதனால் தான் திருமணத்தினை நிறுத்தியதாகவும் தற்போது  விளக்கமளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும், தூனேரியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு, மணமேடைக்கு மணக்கோலத்தில் கூட சென்றுவிட்டனர். அந்த வேளையில் இறுதி நேரத்தில் மணப்பெண் பார்த்திபன் வருகிறார் என கூறி, திருமணத்தினை நிறுத்தினார். 

"மணமேடையில் மணப்பெண் 3 முறை சம்மதம் தெரிவித்த பின்பே தாலிகட்ட வேண்டும்" என்ற மரபு, படுகர் இன மக்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி சம்மதம் கேட்டபோது தான், மூன்றாவது முறை சம்மதமில்லை என கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். 

தாலி கட்ட வந்த ஆனந்தின் கைகளை தடுத்த அவர், ஒருவரை விரும்புவதாகவும், அவர் வந்து விடுவார் என்று கூறிவிட்டு, அங்கிருந்து வெளியேற முயற்சித்தார். ஆனால் பிரியதர்ஷினியின் உறவினர்கள், அவரை சம்மதிக்க வைக்க முற்பட்டனர். ஆனால் முயற்சிகள் தோல்வியில் முடிய, மாப்பிள்ளையாக அமர்ந்திருந்த ஆனந்தோ, அதிர்ச்சியில் உறைந்து போனார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கசிந்தது. 

இந்த நிலையில் மணப்பெண் ப்ரியதர்ஷினியை அவரது பெற்றோர் வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டதாகவும், அவர் காதலனை தேடி சென்னை புறப்பட்டதாகவும் செய்திகள் பரவியது. ஆனால் அதில் உண்மை இல்லை என்றும், அவர், அவருடைய பெற்றோருடன் தான் இருப்பதாக ஆடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். மேலும் தான் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்

அந்த ஆடியோவில், மணமகன் ஆனந்த் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்ததாகவும், அதனால் திருமணத்தை நிறுத்தவே காதலிப்பதாக பொய் கூறியதாகவும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiris girl give explanation why stop her marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->