நீலகிரி: T 23 புலியை தேடும் பணியில் சிப்பிப்பாறை நாய்.! - Seithipunal
Seithipunal


4 பேரை கொன்றுள்ள T 23 புலியை சுட்டுக்கொன்று பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அதனை அதிகாரிகள் தேடி கண்டறிந்துள்ளதாக தெரியவருகிறது. 

நீலகிரி மாவட்டத்தில் பேசுபொருளாக மாறியுள்ள ஆட்கொல்லி புலி, 4 மனிதர்களை தற்போது வரை கொலை செய்துள்ளது. பல்வேறு கால்நடைகளை கடித்து கொன்றுள்ளது. இதனால் அதனை ஆட்கொல்லி புலியாக அறிவித்துள்ள மாவட்ட நிர்வாகம், அதனை சுட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதனால் வனத்துறையினர், காவல் துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் என 100 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் புலியை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியில் சிப்பிபாறை இனத்தை சார்ந்த எட்டு மாத நாயும் பயன்படுத்தப்படுகிறது. 

கடந்த காலங்களில் சந்தன மரகடத்தல் கும்பல், யானை உயிரிழப்புக்கு காரணம் போன்றவற்றை கண்டறிய உதவிய அதவை என்ற பெயர் கொண்ட பெண் நாய், புலியை கண்டறிய உதவி செய்யும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

புகைப்படம் : T 23 புலி

மேலும், புலியை கண்டறிந்த பின்னர், அதன் உடலில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி செய்யப்படும். அதுவும் இயலாத பட்சத்தில் சுட்டுக்கொல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiris Forest Dept Use Chippiparai Dog to Capture T 23 Category Tiger


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->