நீலகிரி: யானைக்கு தீ வைத்து கொளுத்திய கொடூரர்கள்.. காரணம் என்ன?.. உள்ளூர் மக்கள் கவலை.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் அருகேயுள்ள மசினகுடி பகுதியில் 40 வயதான ஆண் யானை முதுகில் பலத்த காயத்துடன் சுற்றிவந்த நிலையில், பழங்களுக்குள் மருந்து மற்றும் மாத்திரைகளை வைத்து மறைமுகமாக வனத்துறையினர் கொடுத்ததும் குணமடையவில்லை. இதனையடுத்து கும்கி யானைகளின் உதவியுடன் யானைக்கு சிகிச்சை அழிக்கப்பட்டும் பலனில்லை. 

கடந்த 1 வாரத்திற்கு முன்னதாக மரவகண்டி பகுதியில் சுற்றித்திரிந்த யானை தண்ணீருக்குள் இருந்துள்ளது. இதன்போது சந்தேகமடைந்த வனத்துறையினர் சோதனை செய்கையில், யானையின் காதுககளில் பலத்த தீக்காயம் இருந்துள்ளது. இதற்கு சிகிச்சை அளித்தும் பலனில்லாது, கடந்த 19 ஆம் தேதி யானை பரிதாபமாக உயிரிழந்தது. 

இந்த நிலையில், யானைக்கு தீவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தவே, மசினகுடி அருகேயுள்ள தனியார் விடுதி ஊழியர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து மசினகுடி தர்கா ரோடு பகுதியை சார்ந்த பிரசாத் (வயது 36), ரேமண்ட் டீன் (வயது 28), ரிக்கி ராயன் (வயது 31) ஆகியோர் யானைக்கு தீ வைத்தது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து காவல் துறையினர் பிரசாந்த் மற்றும் ரேமண்ட் டீனை கைது செய்த நிலையில், ராயனை தேடி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட விடுதிக்கும் சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இவர்களை போன்ற தனியார் விடுதி நிர்வாகத்தால் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், இது தொடர்பாக உள்ளூர் மக்கள் கூறுகையில், " நாங்கள் இங்கேயே பூர்வீகமாக இருந்து வருவதால், விலங்குகள் அவ்வப்போது வந்து சென்றாலும் நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால், இங்கு பின்னாட்களில் வந்து நிலத்தை வாங்கி விடுதிகள் நடத்தி வரும் உள்ளூர் காரர்களில் இருந்து வெளியூரை சார்ந்தவர்கள் வரை பல துயரங்கள் அரங்கேற்றப்படுகிறது. 

இதில், பல விடுதிகள் ஊருக்கு ஒதுக்குபுறமாக கட்டப்பட்டு, யானைகளின் பாதை வழிமறிக்கப்பட்டு அவை ஊருக்குள் வருகிறது. ஊருக்குள் உணவுத்தேடி வரும் யானைகள் மற்றும் காட்டுவிலங்குகள் ஒருமுறை வந்து சென்ற பாதை, உணவு இருப்பிடத்தை நினைவில் கூர்ந்து மீண்டும் அங்கேயே வருகிறது. அவ்வப்போது வரும் யானை எந்த பிரச்சனையும் செய்யாமலும் சென்ற காலமெல்லாம் இருக்கிறது. விலங்குகளின் வாழ்விடங்களை அழித்து, இன்று விலங்குகளை அழிக்கும் முயற்சியையும் மேற்கொண்டு வருவது நமக்கும், விலங்குகளுக்கும் கட்டாயம் பெரும் இழப்பை ஏற்படுத்தும் விஷயம். இனிவரும் நாட்களில் இது போன்ற துயரம் அரங்கேறாமல் இருக்க வேண்டும் " என்று தெரிவிக்கிறார்கள்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiris Elephant Fire Issue Local Peoples got Angry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->