மதுபானங்கள் வாங்க தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


மதுபானக்கடையில் மதுபானங்கள் பெற கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவல் குறைந்துள்ள நிலையில், தொடர்ந்து அடுத்த அலை ஏற்படாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதற்கான நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்திய அளவில் கொரோனா மூன்றாவது அலை எப்போது வேண்டும் என்றாலும் ஏற்படலாம் என்ற சூழ்நிலை நிலவ தொடங்கியுள்ள நிலையில், கேரளாவில் நாளொன்றுக்கு தற்போதைய சூழலில் 30 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தமிழக - கேரளா மாநில எல்லைகள் முழு கண்காணிப்பின் கீழ் உள்ளன.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகளில் மதுபானங்கள் வாங்க இனி கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் எனவும் அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

மேலும், மதுபான கடைகளில் மதுபானங்களை வாங்க வருபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழை வைத்துள்ளார்களா? என்ற ஆவணத்தை, அவர்களின் ஆதார் கார்டு வைத்து உறுதி செய்த பின்னரே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiris District Collector Order If You Want Liquor you Will Vaccinated First


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->