தேடித்தேடி ஆப்பு வைத்த மாவட்ட ஆட்சியர்.. முகக்கவசம் அணியாதவர்களுக்கு உச்சகட்ட எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


பொதுவெளியில் வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மக்களிடம் முகக்கவசம் அணியும் பழக்கம் குறைந்து வருகிறது. இதனை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என நீலகிரி ஆட்சியர் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதமாக கொரோனா வைரஸ் பரவல் குறைந்துகொண்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியாமல் பொதுவெளியில் வருபவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா எச்சரித்திருந்தார். 

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முகக்கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட்ட நிலையில், அதிகாரிகள் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஊட்டியில் மக்கள் மற்றும் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் அரசின் விதிமுறையை கடைபிடிக்கிறார்களா? என்று மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா நேரில் களமிறங்கி ஆய்வு செய்தார். இதன்போது, முகக்கவசம் அணியாமல் வந்த சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர், தலா ரூ.200 அபராதம் விதித்து கண்டித்து அனுப்பி வைத்தார்.

இந்த விஷயம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தெரிவிக்கையில், " பொதுவெளியில் வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மக்களிடம் முகக்கவசம் அணியும் பழக்கம் குறைந்து வருகிறது. இதனை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுநெறிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மீண்டும் மீண்டும் அலட்சியமாக செயல்பட்டு முகக்கவசம் அணியாத வழக்கில் சிக்கினால் கைது செய்யப்படுவார்கள் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiris Collector Innocent Dhivya File Offence Penalty Obey Corona Virus Rules Face Mask


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->