நீலகிரி: பங்காளிகளுடன் வந்து பேக்கரியில் கேக் சாப்பிட்ட கரடி... ஒத்தையில் தவிக்கவிட்டு சென்ற சோகம்.! - Seithipunal
Seithipunal


கோத்தகிரி அருகே பேக்கரியில் உள்ள பொருட்களை நாசம் செய்து வந்த மூன்று கரடியில், ஒரு கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர், அடர்ந்த வனப்பகுதியில் விட்டுள்ளனர். 

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி மிளித்தேன் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கிறது. இங்கு சமீப காலமாக கரடி உலா வருவதாக கூறப்படும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி கிராமத்தில் உள்ள பள்ளி வளாகத்தை சுற்றிலும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாகவே கிராமத்தில் உள்ள முகம்மது உசேன் என்பவருக்கு சொந்தமான பேக்கரிக்குள் புகுந்த கரடி, அங்குள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்துள்ளது. இது குறித்து முகமது உசேன் வனத்துறைக்கு தகவல் தெரியப்படுத்தவே, வனத்துறையினர் கூண்டு வைத்து கரடியை பிடிக்க முடிவு செய்துள்ளனர். 

இந்நிலையில், இன்று அதிகாலை ஒரு மணியளவில் 3 கரடிக்கு கூண்டு வைக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு கரடி சிக்கியுள்ளது. இதனையடுத்து சக கரடிகளுக்கு எச்சரிக்கை செய்யவே, பிற இரண்டு கரடிகளும் தப்பி ஓடியுள்ளது. இதனையயடுத்து சிக்கிய கரடியை வனத்துறையினர் மேல் பவானி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். 

மேலும், இதுகுறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், " விலங்குகள் பொதுவாக உணவு இருக்கும் இடத்தை பார்த்து விட்டால், அந்த இடத்திற்கு மீண்டும் வந்து தங்களுக்கான உணவை எடுத்துச் செல்வது வாடிக்கை என்றும், காட்டிற்குள் உணவு கிடைக்காத பட்சத்தில் அவை குடியிருப்பு பகுதிக்குள் வந்து உணவுகளை தேடி வருகிறது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiris Bear Capture by Forest Department eating cakes form Bakery


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->