வியப்பில் ஆழ்த்தும் இடம்... மனதை மயக்கும் இடம்! - Seithipunal
Seithipunal


ஊட்டியில் இருந்து ஏறத்தாழ 13கி.மீ தொலைவில் அமைந்துள்ள அருவிதான் கல்லட்டி அருவி.

நீலகிரி மலையை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்து சிறப்பித்துள்ளது. அதில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் கல்லட்டி நீர்வீழ்ச்சியும் ஒன்று. 

மனதை மயக்கும் ஓர் அழகிய ஊர். கல்லட்டி நீர்வீழ்ச்சியில் காணப்படும் அருவி, கோடை வெயிலில், சுற்றுலா பயணிகளுக்கு இதமளிப்பதாக உள்ளது. 

இந்நிலையில், ஊட்டியிலிருந்து-தெப்பக்காடு, மைசூர் செல்லும் சுற்றுலா பயணிகளும், தெப்பக்காடு, மைசூர் பகுதிகளிலிருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளும், கல்லட்டி நீர்வீழ்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.

பைகாரா ஏரி, கல்லட்டி அருவி, தெப்பக்காடு யானை முகாம் என்று முதுமலைக்கு அருகில் சுற்றிப் பார்க்கவும் ஏராளமான இடங்கள் உண்டு.

இந்த நீர்வீழ்ச்சி, பறவைகளை பார்வையிட விருப்பமுடையவர்களுக்கு சொர்க்கமான இடமாக விளங்குகிறது. 

இதன் சுற்றுப்புறங்கள் அமைதியான மற்றும் இயற்கையான சூழலை கொண்டுள்ளதால், இது சிறு பயணம் செல்ல சிறந்த இடமாக உள்ளது. 

பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் இடமாக கல்லகட்டி நீர்வீழ்ச்சி உள்ளது. 

முதுமலை மற்றும் மசினகுடி பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இங்கு சென்று இளைப்பாறுவது மட்டுமின்றி, புகைப்படங்கள் எடுத்துச் செல்வது வழக்கம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nilagiri kallatti falls


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->