தமிழகத்துக்கு வந்ததா நிபா வைரஸ்? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  நபர்.. பீதியில் மக்கள்!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மேலபூவிழுந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி கேரளாவில் கேரளாவில் பணியாற்றி வருகிறார்.

கேரளாவில் பணியாற்றி வந்த அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார், பின்னர் சொந்த ஊருக்கு திரும்பிய அவர் 
காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார், அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகித்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுப்பிவைத்தனர்.  

இதனையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு தனி அறையில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மத்திய சோதனை கூடத்திற்கு அனுப்பப்பட உள்ளது. இந்த சோதனைக்கு பிறகே அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருக்கிறதா அல்லது வேர் ஏதேனும் காய்ச்சலா என்பது தெரியவரும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இதே போல கடலூர் மாவட்டத்தை  சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் கேரளவில் பணியாற்றி வந்தார் அவருக்கும் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவரை சோதித்த மருத்துவர்கள்  நிபா வைரஸ் இல்லை என உறுதிசெய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

niba virus in tamilnadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->